டிஸ்கவரி டிவியை பார்ப்பவர்கள் ஷாருக்கானை பற்றி தெரியவா பார்க்கிறார்கள்? பொதுவாக இந்தியாவில் கால்பதிக்க வருபர்களெல்லாம் மசாலா வியாபார உத்தியை பயன்படுத்த ஆரம்பித்துவிடுகின்றனர். தரமான நடுநிலையான செய்தியோடு வந்தவர்களெல்லாம், இப்போது சிறு குழந்தைகளை அழவைத்து டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒருகாலத்தில் பெண்கள்தான் அதிகமாக சிரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் பல ஆண்கள் முத்து பல்லழகன் மாதவன் போல ஈஈ என்று சிரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். டிவியை போட்டாலே இந்த மாதிரி முத்து பல்லழகன்களைத்தான் பார்க்க முடிகிறது. பல இடங்களில் இது ஓரூ trendஆகவே மாறியிருக்கிறது--காரணம்? soft skillஆம்! இது ஒன்றும் காந்தியோ இயேசுவோ போதித்த அஹிம்சை இல்லை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியான சிரித்து காலைவாரும் ஒரு சூழ்ச்சி முறை.
கருத்துகள்