முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஞாநி கருணாநிதியைப் பற்றி அப்படி எழுதவில்லை!

எனக்கு பிடித்த ஒரு சில ஆளுமைகளில் ஒருவர் ஞாநி. அவர் இறப்பை ஒட்டி, அவரை சில திமுக அபிமானிகள் அவர் கருணாநிதி வேட்டியில் சிறுநீர் கழித்தார் என்றும் வேறு சிலர் அவர் வேட்டியை நனைத்தார் என்றும் எழுதியதாக அவரை தூற்றிக்கொண்டு திரிகிறார்கள்.



ஞாநி எழுதிய அனைத்து ஓ…பக்கங்களையும் வாசித்தவன் என்ற முறையில் ஒன்றை என்னால் உறுதியாக சொல்ல முடியும் அவர் அப்படி எழுதவேயில்லை என்பதுதான். ஞாநி கூட ஒருமுறை விநாயக முருகன் என்பவருடன் தான் அப்படி கூறியதை நிரூபிக்க சொன்னதாக நியாபகம்.

அந்த குறிப்பிட்ட பத்தி இதுதான்:
மிக அண்மையில் ஒரு வீடியோ காட்சியில் பதிவாகியிருக்கும் உரை-யாடல் இது... சுற்றுப்பயணம் சென்ற இடத்தில், தங்கியிருந்த விடுதியின் அறையில் இருந்து வெளியே வரும்-போது, அருகில் தனக்குப் பாதுகாப்-பாக நடந்துவரும் ஆற்காடு வீராசாமியிடம் கருணாநிதி சொல்கிறார்: Ôபாத்ரூம்ல கால் இடறி-டுச்சு. வேட்டி ஈரமாயிடுச்சு. வேற வேட்டி மாத்திக் கட்டிக்கிட்டு வர லேட்டா-யிடுச்சு!Õ

1. என்னை பொறுத்தவரை அவர் கால் இடறி பாத்ரூமில் விழுந்து விட்டார். அதனால் தரையில் இருந்த ஈரம் அவர் வெட்டி மீது பட்டதால், வேறு வேட்டி மாற்ற வேண்டியிருந்தது. எங்கும் சிறுநீர் என்று எனக்கு எந்த பொருளும் புலப்படவில்லை.

2. ஒருவேளை ஈரம் என்ற வார்த்தை உண்மையிலேயே சிறுநீரை குறிக்கிறதென்றால் அதுவும் அவர் வாயால் சொன்னதுதானே?

3. அப்படி ஒரு வீடியோவே இல்லையா?


இனி உண்மையை தெரிந்து கொள்ள அந்த முழு கட்டுரையும் இங்கே:

ஓ…பக்கங்கள் - விருப்பப்படி இருக்க விடுங்கள்!

ஞாநி, ஆனந்த விகடன், அக்டோபர் 10,2007 தேதி,  பக்கம் 148

‘பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்’ என்பான் பாரதி. இந்த ‘ஓ பக்க’க் கட்டுரையும் அப்படித்-தான்... பாரதி வழியில் பேசாப் பொரு-ளைப் பேசத் துணியும் ஒரு முயற்சி!

‘எந்த ஒரு சமூகம் தன் குழந்தை-களையும் முதியவர்களையும் பிச்சை எடுக்கவிட்டிருக்கிறதோ, அந்தச் சமூகம் உள்ளுக்குள்ளேயே அழுகிக்கொண்டு இருக்கிற சமூகம்!’ என்பது அறிஞன் வாக்கு.



இதைச் சற்றே மாற்றியமைத்துச் சொல்வ-தானால், எந்தச் சமூகம் தன் குழந்தைகளையும் முதியவர்களையும் வேலை வாங்கிக்கொண்டு இருக்கிறதோ, அந்தச் சமூகம் ஒரு சுரண்டல் சமூகம்!’ என்பேன் நான்.

குழந்தைகள் செய்ய வேண்டியது எல்லாம், படிப்பதும் விளையாடுவதும் தான். முதியவர்கள்..? இந்தச் சமூகத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் அவர்கள் போதுமான அளவு வேலை செய்து முடித்தாயிற்று. இனி உடலையும் உள்ளத்தையும் வருத்திக்-கொள்ளாமல் ஓய்வெடுப்-பதும்,


மனதுக்குப் பிடித்தமானவற்றை மட்டும் செய்துகொண்டு எஞ்சிய காலத்தை இனிமையான-தாகக் கழிப்பதும்தான் முதியவர்களின் நிஜமான தேவை. அதற்கான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது-தான் குடும்பத்தின், சமூகத்தின் கடமை.

அப்படியானால், 84 வயது முதியவர் ஒருவரை அவர் குடும்பமும் நம் சமூகமும் கொடுமைப்படுத்திக்கொண்டு இருப்ப-தைப் பார்த்து, நாம் ஏன் வாய் மூடிச் சகித்துக்கொண்டு இருக்கிறோம்?

கலைஞர் கருணாநிதிதான் அந்த முதியவர்!

அவருடைய சில கருத்துக்களுடனும், அரசியலுடனும், நிர்வாக வழி முறைகளுடனும் எனக்குக் கடுமையான கருத்து வேறுபாடுகள் உண்டுதான். ஆனால், ஒரு மனிதராக அவர் வதைக்கப்படுவதை, வதைபடு-வதைப் பார்த்துக்-கொண்டு இருக்கப் பொறுக்கவில்லை. பொது வாழ்க்கை-யில் பல துறைகளில் மிகுந்த புத்திக்-கூர்மையுடன் செயல்படுவதைத் தன் முத்திரை யாக நிலை நிறுத்திவைத்தி-ருக்கும் அவர் ஏன் ஓய்வுபெற்று, தான் விரும்பியபடி பொழுதைக் கழிக்க முடியாமல், சூழ்நிலையின் கைதியாக இருக்க வேண்டும்?

மிக அண்மையில் ஒரு வீடியோ காட்சியில் பதிவாகியிருக்கும் உரை-யாடல் இது... சுற்றுப்பயணம் சென்ற இடத்தில், தங்கியிருந்த விடுதியின் அறையில் இருந்து வெளியே வரும்-போது, அருகில் தனக்குப் பாதுகாப்-பாக நடந்துவரும் ஆற்காடு வீராசாமியிடம் கருணாநிதி சொல்கிறார்: Ôபாத்ரூம்ல கால் இடறி-டுச்சு. வேட்டி ஈரமாயிடுச்சு. வேற வேட்டி மாத்திக் கட்டிக்கிட்டு வர லேட்டா-யிடுச்சு!Õ

84 வயது முதியவர் ஒருவர் நம் வீட்டில் இருந்தால், அவர் இந்த நிலையிலும் வேலைக்குச் செல்வதை நாம் விரும்புவோமா? அனுமதிப்-போமா?

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி நடந்த உண்ணா-விரதப் பந்தலில், உட்கார்ந்த நிலையி-லேயே தன்னை மீறிய களைப்பில் அவர் தலை துவள்கிறது. உதட்டோரம் வடியும் எச்சிலை கைக்குட்டை எடுத்துத் துடைத்துக்கொள்ளவும் முடியாத அயர்ச்சியில் அவர் இருக்-கிறார். அவரால் நடக்க முடியவில்லை. சிறுசிறு அடிகளாக எடுத்துவைக்கும்-போது, இரு பக்கமும் பிடித்துக்-கொள்ள ஆட்கள் தேவைப்படு-கிறார்கள். உட்கார்ந்தால் எழுந்திருக்கவோ, நின்றிருந்தால் வாகாக உட்காரவோ, குழந்தையைப் போல அவருக்குப் பிடிமானம் தேவைப்படுகிறது.

என் அப்பா இந்த நிலையில் அலுவலக வேலைக்குப் போய்க்-கொண்டு இருந்தாரானால், நிச்சயம் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பும் மகனாகவே நான் இருப்பேன்.




மேடைப் பேச்சுக்களில் ஒரு விஷயத்திலிருந்து இடையில் இன்னொன்றுக்குத் தாவிப்போய் விரிவாகப் பேசினாலும், மீண்டும் விட்ட இடத்துக்கே கச்சிதமாக வந்து அர்த்தத்துடன் கோத்துக்-கொள்ளும் பேச்சாற்றல் உடையவர் கருணாநிதி. இப்-போது பல வாக்கியங்களைப் பாதியில் விட்டுவிட்டு வேறொன்-றுக்குப் போய்-விடுகிறார். சட்டைப்பையில் வைத்த காகிதத்தை மறந்து-போய் வேறெங்கோ தேடிய-தையும், ஒரு காலில் கட் ஷ¨ கழன்றுபோனது-கூடத் தெரியாமலே தொடர்ந்து நடந்த-தையும் பத்திரிகைச் செய்தி தெரி-விக்கிறது.

இவை எதுவும் அவருடைய குறைகள் அல்ல; முதுமையில் எவருக்கும் இயல்பானவை. உடல் பலவீனமும், செயல் பலவீனமும் எல்லா மனிதர்-களும் முதுமையில் சந்தித்தே தீர வேண்டியவை. ஆனால், அப்போதும் கடும் உழைப்புக்கு அவர்களை உட்படுத்துவதை ஒரு குடும்பமும் சமூகமும் தொடர்ந்து செய்யுமானால், அது மனித விரோதச் செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கருணாநிதி சராசரியாக இன்று ஒரு நாளைக்கு 18 மணி நேரமாவது விழித்திருக்கிறார். விழித்திருக்கும் நேரம் முழுவதும் அரசியல் உள்ளிட்ட பணிகள் அவரை ஆக்கிரமிக்கின்றன.

அரசாங்கக் கோப்புகளைப் படித்து உத்தரவுகளைப் பிறப்பிப்பது, அரசியல் எதிரிகளுக்குப் பதில் அறிக்கைகளைக் காரசாரமாக உடனுக்குடன் வெளி யிடுவது, எதிரிகளிடமிருந்து மட்டு-மல்ல... கூட்டணி நண்பர்களிடமிருந்தும் தன் ஆட்சியைக் காப்பாற்ற தொடர் வியூகங்கள் வகுப்பது, முன்னாள் உடன்பிறப்புக்களும் இந்நாள் எதிரி-களுமான மாறன் சகோதரர்களை எதிர்காலத்தில் தன் வாரிசுகளுக்கு அச்சுறுத்தலாக வளரவிடாமல் பல வீனப்-படுத்தும் நடவடிக்கைகளைத் திட்டமிடுவது... இதெல்லாம் போக, எஞ்சிய நேரத்தில் தன் மனதுக்கு விருப்பமான இலக்கிய & சினிமா & விளை-யாட்டு ரசனைகளில் திளைப்-பது என்று, தான் விழித்-திருக்கும் 18 மணி நேரத்தில் 36 மணி நேரத்துக்-கான உழைப்பை அவர் கொடுத்தாக வேண்டியிருக்-கிறது.

இதில் பாதியைக்கூட, அவர் வயதில் பாதியளவே இருக்கும் ஒருவரால் செய்ய முடி-யாது. இதைப் பார்த்து பிரமிக்கி-றார்கள். Ôதலைவர் மாதிரி வருமா!Õ என்கிறார்கள். உண்மையில், இது பிரமிப்புக்கான விஷயம்தானா?

கலைஞர் கருணாநிதிக்கு இனிமேல் வாழ்க்கையில் அடைய வேண்டிய புதிய புகழும் எதுவும் இல்லை; புதிய அவதூறுகளும் இல்லை; சந்திப்பதற்-கான புதிய விமர்சனங்களும் இல்லை. அவருக்-குச் சூட்டப்படும் புகழுரை-களும், அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் இனி புதிதாக மாறுவதற்கும் வழியும் இல்லை.

யார் நிமித்தம் அவர் இந்த முட்கிரீடத்தைத் தரித்திருக்க வேண்டும்? இதையெல்லாம் ‘விட்டு விடுதலையாகி, சிட்டுக் குருவியைப் போலேÕ சுதந்திரமாகச் சிறகடிக்க வேண்டியவர் அவர். தன்னை உண்மையான பகுத்தறிவாளராக உரத்துச் சொல்வதற்குத் தடையாக இருக்கும் முதலமைச்சர் பதவி என்ற துண்டை உதறிவிட்டு, எழுத்தாளர் & இலக்கியவாதி & சமூகச் சிந்தனையாளராக சுதந்திரமாகச் செயல்பட, இந்த வயதில்கூட முடியாதென்றால் எப்படி?

அவருடைய ரத்த வாரிசுகளும் அரசியல் வாரிசுகளுமான மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி மூவருக்கும் ஒரு கேள்வி: ‘ஒரு தலைவராக அவரைப் பார்க்காமல், ஒரு தந்தையாக அவரைப் பாருங்கள். தினம் இப்படி உடல் உபாதைகளுடன் அவர் பொது வேலைகளைச் சுமந்துகொண்டு அலைக்கழிக்கப்படுவது உங்களுக்குச் சம்மதம்தானா? ஏன் அவருக்கு ஓய்வு தர மறுக்கிறீர்கள்?’

தி.மு.க&வினருக்கு ஒரு கேள்வி: ‘கட்சிக்குள் ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சர் என்பதை எழுதாத விதி-யாக ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு, இப்போதே ஸ்டாலினை முதல்வராக்கு-வதில் உங்களுக்கு என்ன தயக்கம்? மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கிவிட்டு, சோனியா கட்சித் தலைவராக இருந்து காங்கிரஸை வழிநடத்துவது போல, கட்சித் தலைவராக மட்டும் இருந்து-கொண்டு கலைஞர் உங்களை வழிநடத்-தினால், உங்களால் அரசியல் எதிரிகளைச் சமாளிக்க முடியாமல் போய்விடும் என்று அச்சப்படுகிறீர்களா? உங்கள் அச்சத்தி-னால், ஒரு முதியவரை இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டுமா?’

கலைஞர் கருணாநிதிக்கு ஒரு கேள்வி: ‘உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்’ வேண்டுமென்று கேட்ட பாரதிக்கு அது 39 வயது வரைகூட வாய்க்கவில்லை. உங்களுக்கு அது 80 வயது தாண்டும் வரை வாய்த்தது. இன்னும் 20 ஆண்டுகள் உங்கள் விருப்பம் போல் ஓய்வெடுக்கவும், உங்கள் விருப்பம் போல் கருத்து தெரிவிக்கவும், உங்கள் விருப்பம் போல் கலை இலக்கியப் படைப்புகளில் ஈடுபடவும் தடையாக இருக்கும் பதவி யைத் தூக்கி எறியக்கூட வேண்டாம்; கை மாற்றிவிட்டுப் போவதற்கு ஏன் தயங்கு-கிறீர்கள்? இந்தத் தங்கக் கூண்டிலிருந்து உங்களை நீங்களேதானே விடுவித்துக்-கொள்ள வேண்டும்?

பொதுமக்களுக்கு ஒரு கேள்வி: ‘முதியவர்--களைத் தங்களோடு வைத்துக்-கொள்ள விரும்-பாமல் முதியோர் இல்லத்-துக்கு அனுப்பு-வது தவறுதான்; அதேசமயம், தங்கள் சுயநலத்துக்-காக, தங்களுட-னேயே வைத்துக்கொண்டு ஓய்வே தராமல் அவர்-களைக் கடுமையாக வேலை வாங்குவதும் தவறா, இல்லையா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளி/கல்லூரி தேர்வு முறை

பல் ஆண்டுகளாகவே நமது கல்வியின் தரம் பற்றிய சிந்தனைகள் பெரிதும் பேசப்படுகின்றன. இதில் முக்கிய கவனம் நமது தேர்வு முறைக்குததான் தரப்பட வேண்டும். தற்போது வருடம் ஒருமுறையே, அதுவும் ஒரு குறிப்பிட்ட தேதிகளில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படுகின்றன; இதை நோய்கள போன்ற சில தவிர்க்க முடியாத காரணங்களால் மிஸ் பண்ணினால் ஒரு வருடமே பழாய்ப் போகும் நிலை இருக்கிறது. எனவே இத்தகைய தேர்வுகள் எப்போது வேண்டுமானாலும் (Microsoft certifications போல) எழுதுமாறு சீர்திருத்தப்பட வேண்டும்.

என்னவள்

என்னவள் அவள் ஊனமுற்றவளா? மன்னிக்கவும் நான் பார்த்தது அவள் இதயத்தை மட்டும் (மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய சிந்தனையில் 90களில் எழுதிய கிறுக்கல்)

புதிய தலைமுறை

"kicking the ass" என்பார்களே அதுபோல "புதிய தலைமுறை" பத்திரிக்கை மற்ற பத்திரிக்கைகளையும் தரமான கட்டுரைகளை வெளியிடுமாறு செய்வதாக படுகிறது. விகடன் கூட பல நல்ல புதிய பக்கங்களை தொடங்கியுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான சூழல். "புதிய தலைமுறை" ஐந்து ரூபாய்க்கு எப்படி பத்திரிகை நடத்துவது என்று வெளியிட்டால் தமிழில் பல தரமான் பத்திரிக்கைகள் வர உதவியாக இருக்கும்.