ஒருகாலத்தில் பெண்கள்தான் அதிகமாக சிரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் பல ஆண்கள் முத்து பல்லழகன் மாதவன் போல ஈஈ என்று சிரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். டிவியை போட்டாலே இந்த மாதிரி முத்து பல்லழகன்களைத்தான் பார்க்க முடிகிறது. பல இடங்களில் இது ஓரூ trendஆகவே மாறியிருக்கிறது--காரணம்? soft skillஆம்! இது ஒன்றும் காந்தியோ இயேசுவோ போதித்த அஹிம்சை இல்லை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியான சிரித்து காலைவாரும் ஒரு சூழ்ச்சி முறை.
பலர் அறிவியல் என்பது மாறக்கூடியது என்பதை மறந்தோ, தெரியாமலோ "scientific" என்று பேசுகின்றனர். அறிவியல் என்பது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொய் என்பதே உண்மை. நேற்று ஒரு கருத்து, இன்று ஒரு கருத்து--இதை வித்தியாசமான முறையில் சொல்வதானால் "New theories evolve everyday" அறிவியர்பூர்வமாக கண்டுபிடிக்கப்படும் மருந்துகள் கூட 100 சதவீதம் பயனளிக்கும் என்று உறுதிக் கூற முடியாது--காரணம் எந்த மருந்துகளும் 100சதவீதம் பயனளிக்கும் என்று உறுதிக் கூறுவதில்லை--தேவையும் இல்லை
கருத்துகள்